கரூர், புகளூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.ராஜேந்திரன் என்ற முன்னால் TNPL காகித மில் உதவி மேலாளர் அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் வாங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்ததன் பேரில், வீட்டுமனை தனிப்பட்டா வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் நில அளவையராக பணிபுரியும் திரு.அருண், வயது 34/25, த/பெ கோபால் என்பவரை அணுகியபோது கடந்த 03.10.2025ந்தேதி, அருண் ரூ.24,000/- கையூட்டு கேட்டும், பின்னர் ரூ.9,000/- ஆக குறைத்து கையூட்டு கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 07.10.2025ந்தேதி TNPL காகித மில் உதவி மேலாளர் திரு.ராஜேந்திரன் என்பவர் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 07.10.2025ந்தேதி துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன், ஆய்வாளர்கள் திரு.சக்திவேல், திரு.பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது
நில அளவையர் (சர்வேயர் திரு.அரூண் லஞ்சப்பணம் ரூ.9,000/-ஐ திரு.ராஜேந்திரனிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments