ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 02 ஆம் தேதி முதல் 08 ஆம் தேதி வரை வார விழா உலகளவில்
வனஉயிரின பாதுகாக்கவும்,
கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையை காக்க பொதுமக்கள் மத்தியில் விலங்குகள் மற்றும் காடுகளை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த விழா ஒரு வார காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி 08.10.2025 அன்று நடைபெற்றது. வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரினங்களை காப்போம், இயற்கையை காப்போம், பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுப்போம் என்பதனை வலியுறுத்தும் விதமாக வனத்துறை சார்பில் நடைபெற்ற பேரணியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வன அலுவலர் S. கிருத்திகா அவர்கள், உதவி வனப்பாதுகாவலர் I. காதர் பாஷா அவர்கள் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடத்த இப்பேரணியில் திருச்சி வனச்சரக அலுவலர் V.P. சுப்ரமணியம் மற்றும் சுழல் தணிக்கை சாவடி சரக அலுவலர் S. பாலு அவர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், விழிப்புணர்வு பதாகைகளுடன் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்றது. மேலும் இதன் தொடர்ச்சியாக 07.10.2025 அன்று ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
05.10.2025 அன்று வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு வந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வன உயிரினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்ட வனத்துறையுடன் காவேரி மருத்துவமனை (T. Shirt) இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments