திருச்சி மாவட்டம், மணப்பாறை வெள்ளக்கல் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் கோழியை வேட்டையாடிய நரி அங்குள்ள சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. 60 அடி வரை தண்ணீர் இருந்ததால் அதில் நீந்திக் கொண்டிருந்த நரி பின்னர் ஒரு திட்டுப் பகுதியில் ஏறி அங்கும் இங்குமாக வெளியேற முயன்றது. உடனே அங்கிருந்தவர்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நரியை கடும் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டு அங்குள்ள காட்டுப்பகுதியில் விட்டதை அடுத்து நரி மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments