நேற்று (08.10.2025) நடைபெற்ற ரோட்டரி 2025-2026 மாவட்ட ட்ரீம் திட்டம் – கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, The Rotary Club of Tiruchirappalli Butterflies ஏற்பாட்டில், RCT DC Elite, RCT Winners, RCT DC Queens, RCT Eye Donation, RCT Rivertown, RC Tiruchirappalli, RCT Thendral, RCT Next Gen, RCT Royal ஆகிய கிளப்புகளுடன் இணைந்து ஒரு கூட்டு திட்டமாக நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி Valuer’s Association Jenni Plaza-ல் நடத்தப்பட்டது, மேலும் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர், புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை துறையில் முன்னணி நிபுணரும், Harshamithra Hospital Managing Director-ஆக செயல்படுகிற டாக்டர் P. சசிப்ரியா கோவிந்தராஜ் அவர்கள்.
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி, ரோட்டேரியன்களும் பொதுமக்களும் மிகுந்த எண்ணிக்கையில் கலந்துகொண்டு சிறப்பித்து, நல்ல வரவேற்பைப் பெற்றது.
நிகழ்ச்சி முழுவதும் ஆர்வமுடன் நடைபெற்றது. இதில் புற்றுநோய் தடுப்பு, பரிசோதனை மற்றும் முக்கிய தகவல்கள் பகிரப்பட்டன. பெண்கள் இந்த நோயின் ஆபத்துகளைப் புரிந்து கொண்டு, முன்னேற்பாடு மற்றும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் இது ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இது போல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், நம் சமூகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக வாழும் நிலையை உருவாக்குவது ரோட்டரியின் நோக்கம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments