Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தீப ஒளி திருநாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தற்காலிக காவல் உதவி மையம் திறப்பு

வருகின்ற 20.10.2025-ந்தேதி “தீபெஒளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களது அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பிற்கு போதுமான காவல் ஆளினர்களை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமராக்கள், Drone கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக கூட்ட நெரிசலை சீர்செய்யவும், குற்றச்சம்பவங்கள் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு எவ்வித இன்னல்கள் ஏற்படாவண்ணம் தீபஒளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக கீழ்கண்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தீபஒளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும், NSCB ரோட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சந்தேகப்படும் படியான நபர்களை கண்காணிக்கவும் NSCB ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் (Temporary Police Out Post) அமைக்கப்பட்டு, அதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி., இ.கா.ப, அவர்களால் இன்று 10.10.2025-ந்தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் பேருந்து நிலையம், பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் (Public Address System) மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அமைக்கப்பட்டு காவல் ஆளினர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் குற்றங்களை தடுக்கவும், சந்தேக நபர்களை கண்காணிக்கவும் 8 கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Towers) 1). N.S ரோடு மலைக்கோட்டை வாசல், 2) புறக்காவல் நிலையம் (தெப்பகுளம் நந்திகோவில் சந்திப்பு), 3) மலைக்கோட்டை ஆர்ச் அருகில் (ராணி பெட்ரோல் பங்க்), 4).சிங்கார தோப்பு பூம்புகார் ஜங்ஷன், 5.சந்து கடை, 6).மெயின்கார்டு கேட், 7) காந்திமார்க்கெட் ஆர்ச் மற்றும் 8) கம்மாள தெரு சந்திப்பு என 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, தொலைநோக்கி (Binocular) மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்ற நடத்தை உடைய நபர்களை கண்காணிக்க தெப்பக்குளம், NSCB ரோடு புறக்காவல் நிலையம், மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் அதிநவீன சுழலும் PTZ கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளது. அதேபோல் காந்திமார்க்கெட் ஆர்ச், பெரிய கடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர்ஷா தெரு, மதுரை ரோடு, நந்தி கோவில் தெரு, W.B. ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 114-க்கும் அதிகமான CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்ற நடத்தைக்காரர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குரிய மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அவற்றை இயக்குவதற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழா வண்ணம் திருச்சி மாநகரில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாகவும், புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள Monitor-கள் மூலமாகவும், நாள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டம் நிறைந்த பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள காவலர்கள் FRS செயலி மூலம் சந்தேக நபர்களை முக அடையாளங்களை சரிபார்த்து, கெட்ட நடத்தைகார்களின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.


கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை கால பாதுகாப்பு பணிக்காக 3 காவல் உதவி ஆணையர், 9 காவல் ஆய்வாளர்கள், 14 சார்பு ஆய்வாளர்கள், 80 காவல் ஆளிநர்களும் மற்றும் 90 ஊர்க்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து ஒழுங்கு பாதுகாப்பு :
கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஓழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில், 3 காவல் ஆய்வாளர், 6 சார்பு ஆய்வாளர்கள், 95 காவல் ஆளிநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கடை வீதிக்கு வரும் பொதுமக்கள் தங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக சங்கரன்பிள்ளை ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நான்கு சக்கர வாகன நிறுத்தும் இடம், சத்திரம் பேருந்து நிலையம் பார்க்கிங், மெயின்கார்ட்கேட் சாரதாஸ் பார்க்கிங், WB Road-ல் உள்ள Multilevel Parking, சிங்காரதோப்பில் உள்ள யானைகுளம் மைதானம் பார்க்கிங், சூப்பர் பஜார் பார்க்கிங், மங்கள் & மங்கள் பார்க்கிங், நாவாப் வாலாஜா வளாகம் பார்க்கிங், பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் (பள்ளி விடுமுறை தினத்தில் மட்டும்), செயின்ட் ஜோசப் பள்ளி மைதானம் (பள்ளி விடுமுறை தினத்தில் மட்டும்), ஆகிய இடங்களில் சுமார் 3000 இருசக்கர வாகனங்கள் மற்றும் சுமார் 1000 கார்கள் நிறுத்துவதற்கு போதுமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் சிங்காரத்தோப்பு யானைக்குளம் மைதானம் ஆகிய 2 இடங்களில் கார்களுக்கு அனுமதி இல்லை.
மேலும், பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் தங்களது உடைமைகளை ஒப்படைக்கவேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்களாக இருந்தால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், காவலர் என்று கூறிக்கொண்டு தங்கள் நகைகளை பத்திரமாக பொட்டலத்தில் மடித்து தருகிறேன் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு என மொத்தம் சுமார் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றி கடைவீதிக்கு வந்து பொருள்களை வாங்கி செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரின் அவ்போதைய அறிவுரைகளை கடைபிடித்து, பொதுமக்கள் காவல்துறையினருக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை நலக்கிட வேண்டும்மென திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *