கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக்கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் தொண்டர் பவுன்ராஜ் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கைதான இருவரும் நீதிமன்ற காவலில் இருந்தனர்.
காவல் முடிந்த நிலையில் அவர்களின் காவல் நீட்டிப்பு தொடர்பாக மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்ற எண் 1- ல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.
நேற்று தொடர்ந்து நடந்த விசாரணையின் போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு கலைக்கப்பட்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.எனவே கலைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கில் ஆஜராகி காவல் நீட்டிப்பு தருமாறு கேட்க முடியாது என தமிழக வெற்றி கழக வழக்கறிஞர் சீனிவாசன் வாதிட்டார்
மேலும் சிபிஐ கேட்டால் மட்டுமே காவாலை நீட்டிக்க முடியும் என வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்கள் ஜாமீன் பெற்று வெளிவந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….



Comments