திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில், சாலையைக் கடக்க முயன்ற அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் உடல் சிதறி பலியானார்.
மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் நகர் அருகே, பெயர் மற்றும் விவரம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர் மீது மோதியது.
இந்த மோதலில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த இளைஞர், சாலையில் கிடந்துள்ளார்.
அப்போது, பின்னால் வந்த மற்றொரு அரசுப் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதால், அந்த இளைஞரின் உடல் சிதறிப்போனது.
அடிக்கடி விபத்துக்கள் நிகழும் பகுதியாக இந்த அம்பேத்கர் நகர் சாலைப் பகுதி இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் போதுமான மின்விளக்கு வெளிச்சம் இல்லாததே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடக்க முக்கியக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மணிகண்டம் போலீசார், பலியான இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களையும் தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments