திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி கலந்து கொண்டார்.
இதில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக வேஷ்டி சேலை இனிப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி தூய்மையாளர்களின் பணி மகத்தான பணி நாம் தூய்மையாக வெளியில் நடமாடுவதற்கு இந்த தூய்மை பணியாளர்களின் பணி முக்கியத்துவமான ஒன்று.
தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஒய்வில்லாமல் அவர்கள் குடும்பத்தினரையும் தாண்டி இந்த ஊரும் நாடும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று உழைக்கின்றனர். அப்படிப்பட்ட உழைக்கும் மக்களோடு இணைந்து இனிய தீபாவளியை கொண்டாடுவது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உங்களோடு ஒருநாள் மகிழ்ச்சியாக தீபத்திருநாளை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். திருச்சி முழுவதும் தூய்மையாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் தான் காரணம் நீங்கள் உங்கள் பணியை சரிவர செய்வதால் மக்கள் அனைவரும் சுகாதாரத்துடன் நடமாட முடிகிறது என பெருமிதத்துடன் தூய்மை பணியாளர்களை மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அனுஜ் டைல்ஸ் உரிமையாளர் தனசேகரன், அஸ்வின் ஸ்வீட்ஸ் குழும நிர்வாக இயக்குனர் அஸ்வின்,வேதா குழும திட்ட இயக்குனர் ஐயப்பன்,திருச்சி விஷன் அறக்கட்டளை இயக்குநர் ராகவன் , திருச்சி விஷன் தலைமை செயல் அதிகாரி செந்தில்குமார்,சமூக ஆர்வலர் பெட்டவாய்த்தலை சரவணன், சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments