திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 21.10.2025 அன்று பதிவான மழையளவு குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் மொத்தமாக 104 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 4.33 மி.மீ மழை பெய்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, லால்குடி தாலுகாவில் உள்ள புள்ளம்பாடியில் 18.4 மி.மீ மழையும், கல்லக்குடியில் 15.4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, மணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள சமயபுரத்தில் 12.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தின் முக்கிய மழைமானி நிலையங்களில் பதிவான மழையளவுகள் பின்வருமாறு:புள்ளம்பாடி: 18.4,கல்லக்குடி: 15.4,சமயபுரம்: 12.4,லால்குடி: 4.4,தேவிமங்கலம்: 4.8,வத்தலை,அணைக்கட்டு: 4,கோப்பம்பட்டி: 4,திருச்சி டவுன் (மேற்கு): 5.2,திருச்சி ஜங்சன்: 5.2
ஆறு மழைமானி நிலையங்களில் எவ்வித மழையும் பதிவாகவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணச்சநல்லூர் – சிருகுடி,மணப்பாறை
கோவில்குட்டி, மருங்காபுரி,முசிறி
துறையூர் – தென்பரநாடு
இந்த மழையானது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஓரளவு ஆறுதலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments