திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்த போது அவரது கணவன் வீட்டிற்கு பூட்டு போட்டு சிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே பெல் நிறுவன குடி யிருப்பு வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. திருப்ப ராய்த்துறை தபோவனம் கட்டுப்பாட்டில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி பள்ளி இயங்குகிறது. இப்பள்ளி யின் 55வயதான தலைமை ஆசிரியருக்கும். அதே பள்ளியில் பணிபுரியும் 34வயதான கணித ஆசிரியைக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரி யையின் கணவர் பெல் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.
இந்த நிலையில் கடந்த 17ம்தேதி கண வர் வீட்டில் இல்லாத நேரத்தில் தலைமை ஆசிரியர், பெல் குடியிருப்பில் உள்ள ஆசிரியை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டுக்கு வந்த கண
வர், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரும் இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டு போட்டு பூட்டிய ஆசிரியையின் கணவர், அருகில் உள்ள சகஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த சக ஊழியர்கள், தலைமை ஆசிரியரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பெல் நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பெல் தரப்பில் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கட்டாய விருப்ப ஓய்வில் செல்வதாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் பள்ளி நிர்வாகம் சார் பில் எழுதி வாங்கப்பட்டு பள்ளியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் பெல் ஊழியர்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்த தலைமை ஆசிரியரை, அந்த வீட்டையும் காலி செய்யும்படி பெல் நிர்வா கம் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி தலைமை ஆசிரியர் தான் குடியிருந்து வந்த வீட்டை காலி செய்து விட்டு சென்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments