திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி
தாயுமானபுரத்தை சேர்ந்தவர் உமா சங்கர் (33). இவரது சகோதரர்
அழகேஸ்வரன் (37) வழக்கறிஞர்
இவரும் சகோதரர் உமா சங்கரும் பாலக்கரை பகுதியில் அரிசி கடை வைத்துள்ளார்கள்.
இருவரும் திருமணமானவர்கள்
அண்ணன் தம்பி இருவரும், இன்று 20.10.2025 நள்ளிரவு 01:30 மணிக்கு வரகனேரி பெரியார் நகர் வளைவு அருகில் நடந்து வரும் பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் உமா சங்கர் மார்பில் கத்திக்குத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது சகோதரர் அழகேஸ்வரன் வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். உமா சங்கரை கொலை செய்த வேலு, சூர்யா, மோகன் 3 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கேட்ட பொழுது உமாசங்கரும் அவரது சகோதரரும் வாகனத்தில் சாலையில் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சரித்திர பதிவேடு குற்றவாளிகளான வேலு மற்றும் சூர்யா இருவரும் உமாசங்கர், அழகேஸ்வரனை கத்தியால் குத்தினர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை உள்ளார்.
இவர்களுடன் மோகனும் இந்த தகராறு ஈடுபட்டுள்ளார். மதுபோதை தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments