திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பாக அமைந்துள்ளது சின்ன ஏரி.
இந்த ஏரி சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எந்த காலத்திலும் தண்ணீர் வற்றாமல் நீர் இருந்து கொண்டே இருக்கும். இந்த சின்ன ஏரியில் தற்பொழுது மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதந்து கொண்டு உள்ளது.இதனால் துர்நாற்றம் வீசுவது உடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த சின்ன ஏரியில் நகரின் பெரிய உணவகங்களில் இருந்து மட்டுமில்லாமல் சிறு சிறு கடைகள் தள்ளுவண்டிகள் உள்ளிட்டவர்களில் விற்கப்படும் இறைச்சிகளின் கழிவுகள் மதுபான கடைகளில் உள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து மொத்தமாக இந்த சின்ன ஏரியில் கொட்டுவதால் நீரின் தன்மை மாறி உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி சின்ன ஏரி தண்ணீரில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் மருந்துகள் தெளித்து பொதுமக்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நகரில் உள்ள கழிவுகள் சின்ன ஏரியில் வராமல் இருக்கவும் கடையிலிருந்து கொட்டப்படும் கழிவுகளை தடுக்க வேண்டிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments