திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரி அலுவலகத்தில் இன்று (26.10.2025) கோட்ட மேலாளர் மற்றும் தேசிய சாலை மேம்பாட்டு ஆணையம் (NHAI) அதிகாரிகளை வரவழைத்து கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டேன்.

காலை 11 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை இரண்டு மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் G-கார்னர் உள்ளிட்ட நீண்ட நாள் ரயில்வே மற்றும் சாலை மேம்பாட்டு கோரிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டேன். இரு துறைகளும் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் கலந்தாலோசனை செய்தோம்.

திருச்சி தொகுதியில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருக்கும் முக்கியப் பிரச்சனைகளில் தீர்வு காண்பதில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஆர்வமாக இருக்கிறேன். நீங்களும் முடிந்தமட்டும் அவற்றை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொண்டேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments