திருச்சி கல்லணை சாலையில் உள்ள பனையபுரம், உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு திறந்தவெளியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டது.

தற்போது கொள்முதல் செய்த நெல்லை சாக்கு முட்டையில் கட்டி வைத்துவிட்டு அதனை குடோன்களுக்கும், அரவை நிலையங்களுக்கும் கொண்டு செல்ல லாரிகள் இல்லாததால் கடந்த ஐந்து தினங்களாக நெல் மூட்டைகள் சாலையிலேயே தேங்கிக்கிடக்கிறது.
அதேநேரம் கடந்த மூன்று தினங்களாக மழை பொய்த்து வெயில் சற்று கடினமாக அடித்துவருவதால் மேலும் பல குருவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்து தங்களது நெல்லையும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வருவதுடன் எப்போது நெல்லை கொள்முதல் செய்வார்கள் என்று காத்திருக்கின்றனர்.

இதனால் உத்தமர்சீலி மற்றும் பனையபுரம் கிளிக்கூடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நெல்மணிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் கொட்டிவைக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் நெல்மணிகளை பாதுகாத்து வைப்பது மிக கடினமாக வேலையாக இருப்பதாகவும் இரவு நேரங்களில் காவல் காப்பது சிரமமாக உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இந்த நிலையில் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு நேரடி கொள்முதல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து

நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்வதுடன் லாரிகள் மூலம் உரிய இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments