திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இன்று (30.10.2025) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக் குழு உறுப்பினர்கள், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.இனிகோ இருதயராஜ் அவர்கள், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் மருத்துவர் அடசுபேர்கான் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 27,22,290-இல் 4,38,322 சிறுபான்மையினர் நல மக்கள் அதாவது 16.10% சிறுபான்மையினர் மக்கள் வசித்து வருகின்றனர். சிறுபான்மையினர் நலம் தொடர்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் 2021 முதல் 2025 வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் குறிப்பாக முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் 1 & 2 சார்பில் 1387 பயனாளிகளுக்கு ரூ.121.02 இலட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 516 பயனாளிகளுக்கு ரூ.64.04 இலட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

உலமா மற்றும் பணியாளர் நலவாரியத்தின் கீழ் 415 உறுப்பினர்களுக்கு ரூ.21.47 இலட்சத்தில் விலையில்லா மிதிவண்டிகளும் மற்றும் 46 உறுப்பினர்களுக்கு ரூ.18.91 இலட்சத்திற்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர 141 சிறுபான்மையின மகளிருக்கு விலையில்லா தையல் இயந்திரம் ரூ.8.9 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறித்துவ தேவாலயங்களை புனரமைத்தல் திட்டத்தின் கீழ் 5 தேவாயலங்களுக்கு ரூ.84.27 இலட்சத்திற்கு பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ள முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு 2 தேவாலயங்களுக்கு ரூ.30.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. தொன்மையான கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் 1890 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித லூர்து அன்னை தேவாலயம் கண்டறியப்பட்டு, இத்தேவாயலத்திற்கு பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.120.00 இலட்சம் செலவில் 13.03.2025 மற்றும் 08.10.2025 அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் கல்லறைத்தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் தாத்தையங்கார் பேட்டை, முசிறி, துறையூர் மற்றும் தொட்டியம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 5 இடங்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் பாதை அமைக்க ரூ.85.48 இலட்சம் மதிப்பீட்டில் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்ட தலைநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களில் 30 இடங்களில் கல்லறைத்தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) மூலம் வழங்கப்படும் கடன் திட்டத்தின் கீழ் 2021 முதல் 2025 வரை 1967 பயனாளிகளுக்கு ரூ.958.49 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்காக வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசின் நிதி உதவியாக ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் 1 பயனாளிக்கு காசோலையும். 7 பயனாளிக்கு ரூபாய் 39,200 மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரமும், 188 பயனாளிக்கு ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகளும், 145 பயனாளிக்கு ரூபாய் 21.23 இலட்சம் மதிப்பீட்டில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 341 பயனாளிகளுக்கு ரூபாய் 56.62 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ராஜலட்சுமி. மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) திரு.ஆர்.பாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments