திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “என் வாக்குசாவடி, வெற்றி வாக்குச்சாவடி” எனும் தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட திமுக அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் மற்றும் A.அம்பிகாபதி தலைமையேற்றனர்.
மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள்
பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,
செளந்தரபாண்டியன் கதிரவன்
ஆகியோர் பங்கேற்றனர்.
திமுக முதன்மை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இதில் கலந்து கொண்டு வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு, வாக்குசாவடி மட்டத்திலான திட்டங்கள் மற்றும் பிரச்சாரம் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
கூட்டத்தில் பெரும்பாலான துறைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துகள் பகிர்ந்துகொண்டனர். அமலாக்கத்துறை சோதனை எங்களுக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனை பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக போலீசாருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.
முறைகேடு நடந்ததா என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை.
திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். திமுகவில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விசாரணையில் நாங்கள் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்.
அதிமுக கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓபிஎஸ் தினகரன் உள்ளிட்டோரை திமுகவின் பி டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார்.
எஸ் ஐ ஆர் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும் ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும் நீக்குவதையும் தான் எதிர்க்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments