திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கு சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல் (சம்பா) – II, மக்காச்சோளம் – II, பருத்தி – II பயிருக்கு பயிர் காப்பீடு செய்யலாம். தற்பொழுது வடக்கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இவ்வாண்டில் சிறப்பு பருத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல் (சம்பா) மக்காச்சோளம் II, பருத்தி II பயிர்களுக்கு 15.11.2025 வரையில் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ.578/-ம், மக்காச்சோளத்திற்கு ரூ.480/-ம் மற்றும் பருத்தி பயிருக்கு ரூ.584/-ம் காப்பீட்டு தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
அதற்கு தேவையான ஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவையாகும்.
பதிவு செய்யும் போது விவசாயிகள் பெயர் மற்றும் விலாசம், நில பரப்பு சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிடப்பட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ளவும், எனவே பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) சிறப்பு பருவத்தில் ஷீமா இன்சூரன்ஸ் கம்பெனி (KGIC) என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது.
விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் நவம்பர்-15 ஆம் தேதிக்கு முன்னதாகவே காப்பீடு செய்ய பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments