தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் ஒன்பதாவது கோட்ட மாநாடு திருச்சியில் இன்று மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் பழனிச்சாமி, மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் உள்ளிட்ட திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்
இக்கூட்டத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் 41மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பணிக்காலமாக அறிவிக்காமல் திமுக அரசு காலதாமதப்படுத்திவருவதுடன், மேல்முறையீடு செய்வதை திமுக அரசு கைவிடவேண்டும் மேலும் சாலைப்பணியாளர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைஅடிப்படையில் பணிநியமனம் வழங்கிடவேண்டும் என சாலை பணியாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், அடுத்து வரும் மாநில மாநாட்டில் தொடர் போராட்டங்கள் அறிப்பது என்றும்
அதேநேரம் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டு வரும் விளம்பர திமுக அரசை கண்டித்து வருகிற நவம்பர் 10 ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு நீதிகேட்டு கையில் தராசுடன் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments