திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SRM மருத்துவமனை அருகில், கடந்த 13.09.2025-ம் தேதி. காரில் வந்த தங்க நகை விற்பனையாளர்கள் மீது மிளகாய் பொடி தூவி, காரில் இருந்த சுமார் 10 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்கள் மீது. சமயபுரம் கா.நி., குற்ற எண். 309(4) BNS @ 61(2), 310(2) BNS -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகளான வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரிகளான 1. பிரதிப் ஜாட் 24/25 S/O தூதாராம், பிச்சாகியோங் கா வாஸ். மல்கோசானி, ஜோத்பூர், ராஜஸ்தான், A2) அனுமான் ராம் 21/25 த/பெ கேமாராம், பில்லடா, மால்கோ சோனி, ஜோத்பூர் ராஜஸ்தான். A3) பண்ணாரம் @ வினோத் 31/25. S/o அமான் ராம். ஜத்திவாஸ், பில்லாடா, ஜோத்பூர், ராஜஸ்தான், A4) கைலாஷ் 21/25 த/பெ சிம்முராம், பில்லடா, மால்கோ சோனி, ஜோத்பூர் ராஜஸ்தான், A5) முகமது சோயில் கான் 21/25 த/பெ முகமது இம்ரான் கான், சோஜத்சிட்டி, பாலி மாவட்டம், ராஜஸ்தான், A6) மனோகர் 27/25 S/O தூதாராம்,

பிச்சாகியோங் கா வாஸ், மல்கோசானி, ஜோத்பூர், ராஜஸ்தான் ஆகியோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 02.11.2025-ம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. திருச்சி மாவட்டம், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 44/25, U/s 87, 351(2) BNS & 5(1), 5(j)(ii) r/w 6(1) of POCSO Act , பெருமாள் 62/25 த.பெ ரெங்கசாமி, நாகமநாயக்கன்பட்டி, வீரமச்சான்பட்டி, துறையூர் என்பவர் பாதிக்கப்பட்ட சிறுமியை துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டாங்காடு,

விளாந்தோப்பு பகுதியில் வைத்து மிரட்டி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பெயரில், மேற்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு. மேற்படி வழக்கின் எதிரி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரியான பெருமாள் 62/25 த.பெ ரெங்கசாமி, நாகமநாயக்கன்பட்டி, வீரமச்சான்பட்டி, துறையூர் என்பவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 02.11.2025-ம் தேதி சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 98 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments