2017 ல் இருந்து செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சூறாவளிப்பட்டி கிராமத்தில் கிராமத்திற்கு வரும் பேருந்தை மறித்து பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இங்கு இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்ற கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் மாணவ மாணவிகள் கையில் மதுபான ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்
தொடர்ந்து மணிகண்டம் போலீசார் போராட்டத்தில் ஈடுபடும் மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
காலை 8:00 மணிக்கு வந்த பேருந்தை சிறைபிடித்த கிராம பொதுமக்கள்
இவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதி இளைஞர்கள் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன
தற்போது சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வ கணேஷ் மற்றும் துணை கண்காணிப்பாளர் சந்தியா ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments