திருச்சி மாவட்டம் மணப்பாறை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகச் செல்கிறது.திருச்சி மாவட்டம் மணப்பாறை முத்தப்புடையான் பட்டி அருகே குளித்தலையில் இருந்து சிவகங்கை வரை செல்லக்கூடிய காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் புதிதாக அமைக்கப்பட்டது .

சில மாத காலங்களிலே குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வார காலமாக குடிநீர் சாலைகளிலும் மற்றும் அனைத்தும் வயல் பகுதிகளில் செல்கிறது. மேலும் மணப்பாறை சுற்றியுள்ள பல பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு சாலை மறியல் வரை மக்கள் போராடி வருகின்றனர்.

ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் சரி செய்ய சொல்லியும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அலட்சிய போக்கால் குடிநீர் வீணாகச் செல்கிறது உடனடியாக சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments