திருச்சி மா காவேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று இரண்டு புதிய சிறப்பு பிரிவுகள் திறக்கப்பட்டன தாய்பாலூட்டல் ஆலோசனை பிரிவு (Lactational Clinic) மற்றும் கீட்டோ டயட் பிரிவு (Keto Diet Clinic). தாய்பாலூட்டல் ஆலோசனை பிரிவை டாக்டர் சுசித்ரா, மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறைத் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை மூலம் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்களுக்கு பாலூட்டல் ஆலோசனைகள் வழங்கப்படும். தாய்மார்கள் மகிழ்ச்சியுடன், தன்னம்பிக்கையுடன் பாலூட்டுவதற்கான வழிகாட்டல் பெறலாம்.
மேலும் பால் குறைவு, பால் இல்லாமை, பால் கொடுக்கும் போது வலி போன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
இது தாய்பாலூட்டல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் முழுமையான தீர்வு வழங்கும் மையமாக (One-stop solution) செயல்படுகிறது கீட்டோ டயட் பிரிவை டாக்டர் எம்.ஆகாஷ், குழந்தை நரம்பியல் நிபுணர் அவர்கள் திறந்து வைத்தார். இது திருச்சியில் முதல் கீட்டோஜெனிக் டயட் மருத்துவமனை ஆகும். மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத (Refractory) வலிப்பு நோய் (Seizures) கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு உணவுச் சிகிச்சை இங்கு வழங்கப்படும்.
இது மா காவேரியின் உணவியல் (Nutrition) பிரிவின் ஒரு முக்கிய சேவை ஆகும். இந்நிகழ்ச்சியில் டாக்டர் டி.செங்குடுவன் (இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர்), அன்புசெழியன் (Facility Director,), மற்றும் டாக்டர் ராஜேஷ் (மருத்துவ நிர்வாகி) ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த இரண்டு புதிய பிரிவுகள் திறப்பது, திருச்சியில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான முழுமையான, பரிவுடன் கூடிய மற்றும் புதுமையான சுகாதார சேவைகளை வழங்கும் மா காவேரி மருத்துவமனையின் இன்னொரு முக்கிய முன்னேற்றமாகும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments