துறையூரைச் சேர்ந்த சம்பூர்ணம் என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தந்தையும் பெரியசாமி உடன் வசித்துவருகிறார். தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் மது போதையில் தினசரி இரவில் ஆபாச வார்த்தைகள் பேசி கலாட்டா செய்வதை வாடிக்கையாகி வருவதால், அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் இரவில் சிரமம் அடைந்துவருகின்றனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது நடவடிக்கை எடுக்காததாலும், வழக்கை வாபஸ்பெற வலியுறுத்தி மது போதையில் இருந்த நபர்கள் கொலைமிரட்டல் விடுத்ததாலும் பாதிக்கப்பட்ட சம்பூரணம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி விபரீதத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments