புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இலுப்பூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அஇஅதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA 2) ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது
இதில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 256 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்து கொண்டனர், இதில் தற்போது தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்த இருக்கும் SIR சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் முகாம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் ராகுல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மேற்கொண்ட ஆலோசனைகளை வழங்கினார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments