இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பு “ கணினி அறிவும் கழனி மனசும்” என்னும் மாணவர்களை நோக்கமாகக் கொண்ட சிறப்பு கருத்தரங்கத்தை 04.11.2025 அன்று நடத்தியது.
இந்த கருத்தரங்கின் முக்கிய விருந்தினராக முனைவர்.என் விஜயசுந்தரி, இணை பேராசிரியர் மற்றும் துறை தலைவர், தமிழ் துறை, உருமு தனலட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி
கலந்து கொண்டார்.
தலைமை உரையை ஜி. இராஜசேகரன், செயலாளர், வாழ்த்துரையை, டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன், இயக்குநர், தொகுப்புரையை
டாக்டர் எம். அனுசூயா, பதிவாளர்,
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், முனைவர் எஸ். கார்த்திகேயன், துணை முதல்வர் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முக்கிய விருந்தினர் தமது உரையில், கணினி தொழில்நுட்பத்தின் பரிமாற்றம், மற்றும் பரிணாம வளர்ச்சி, அதில் மாணவர்களின் முறையான அணுகு முறையின் முக்கியத்துவத்தை விளக்கமாக தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வரவேற்புரையும், நன்றியுரையும் வழங்கினர்.

ஆராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் — டாக்டர் கே. சித்ராதேவி (முதல்வர் அலைட் ஹெல்த் சயின்ஸ்), டாக்டர் டி. ஸ்ரீராம், டாக்டர் ஆர். பாரத் குமார், மற்றும் டாக்டர் ப. வரலக்ஷ்மி மற்றும் UBA ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் எஸ். சார்லஸ் ஜெபபாலன் மற்றும் முனைவர் எம். ஜோசப் செல்த்ராஜ் ஆகியோர் சிறந்த ஏற்பாடுகளை செய்து, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வழிசெய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments