04.11.2025 மதியம் 2 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையத்திற்கும் கொளத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரை பொது பெட்டியில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் பின்புறம் உள்ள பொதுப் பெட்டியில் பயணம் செய்து வந்தவர் சம்பவ இடமான சின்ன சமுத்திரம் என்ற ஊரின் அருகே தூக்க கலக்கத்தில் தவறி விழுந்து தலை சிதறி இறந்துள்ளார்.

இறந்தவரின் வலது கையின் உள்பகுதியில் புலி படம் பச்சை குத்தியுள்ளார், நடு வயிற்றில் 10 சென்டிமீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை செய்த தையல் தழும்பு உள்ளது, சிவப்பு கலரில் அரைஞான் கயிறு தாயத்துடன் கட்டியுள்ளார்.

இறந்தவரின் உடலை திருமதி சாந்தி சிறப்பு உதவி ஆய்வாளர் திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதை காவல் நிலையம் அவர்கள் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்க்கு அனுப்பி விசாரணை செய்து வருகிறார். இறந்தவரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 9080563321 மற்றும் 94981 39826
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments