திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த குண்டூர் 100 அடி சாலையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திரிபுர சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், சந்தனம், தயிர், திரவிய பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
50 கிலோ அரிசியினால் தயார் செய்யப்பட்ட அன்னத்தினால் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மூலவருக்கு அன்னம், காய்கறிகள் மற்றும் வண்ண மலர்கள் கொண்டு சிவபெருமான் உருவ வடிவில் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம் திருவாசகம் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAg
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments