திருச்சி, உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான மாபெரும் இலவச சிறுநீரக மருத்துவ ஆலோசனை முகாம் வரும் 15/11/2025 அன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த முகாமிற்கு, சிறப்பு மருத்துவராகச் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரகப் பாதை மீட்டுருவாக்கு நிபுணர் டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன். MS., MCh., FICS. அவர்கள் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கவுள்ளார்.

குழந்தைகளின் சிறுநீரகப் பாதை தொடர்பான பல்வேறு குறைபாடுகள் மற்றும் நோய்களுக்கு இந்த முகாமில் ஆலோசனை வழங்கப்படவுள்ளது. குறிப்பாக,
சிறுநீரகப் பாதை அடைப்பு
தொடர் நீர்க்கசிதல், படுக்கையில் நீர் கசிதல்
விதை இல்லா நிலை மற்றும் விதை வளர்ச்சியின்மை
அடிக்கடி நீர் கழித்தல், சொட்டு மூத்திரம்
சிறுநீரகக் கற்கள்
சிறுநீரக நரம்பியல் குறைபாடு
ஆண்/பெண் பிறப்புறுப்புப் பிறவிக் குறைபாடுகள்

போன்ற அனைத்துச் சிறுநீரகப் பாதை சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை முறை, எந்த வயதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் உள்ளிட்ட விரிவான ஆலோசனைகள் வழங்கப்படும்.
சிறுநீரகப் பாதை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் இந்தச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுவதால், பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்வது அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு:
0431-4000969
9500943969
9442239476
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments