திருச்சி மாவட்டம் தாயனூர் மேல தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி,ஓய்வு பெற்ற தாசில்தார்.இவர் தாயனூர் குஞ்சாயி அம்மன் கோயில் நிலமான சுமார் 8 ஏக்கரில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் குத்தகைக்கு சாகுபடி செய்து வந்தார் எனக் கூறப்படுகிறது

மேலும் மீதமுள்ள நிலத்தில் கோயில் மருளாளி அசோக்குமாரும், இன்பராஜ் என்பவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர் இது தொடர்பாக சுப்பிரமணிக்கும், அசோக்குமாருக்கும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் மாலை சுப்பிரமணி வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த அசோக்குமார் வாக்குவாதத்தில்

ஈடுபட்டதாக கூறப்படுகிறது அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் அவரது மகன் இருவரும் சேர்ந்து மண்வெட்டியால் சுப்பிரமணி தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி வயலில் பின்னந்தலை சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் விவசாயம் செய்த வயலிலேயே உயிரிழந்துள்ளார்,

தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் கதிரவன் மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுப்பிரமணிக்கு நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்மசிஸ்டாக பணிபுரியும் சித்ரா என்ற மனைவியும், சுசிதர்ஷா என்ற ஒரு மகளும், கவுசிகன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments