Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செய்தி அறிக்கை!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்ணூத்து ஓடை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி (e-Tender) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியீடு: 25.10.2025 அன்று http://www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
25.10.2025 முற்பகல் 9.00 மணி முதல் 10.11.2025 முற்பகல் 9.00 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.
10.11.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இணையவழி மூலம் திறக்கப்படும்.


விருப்பமுள்ளோர் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை http://www.tntenders.gov.in என்ற இணையவழியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல் மற்றும் ஆலோசனை:
குத்தகைக்கு எடுப்பது தொடர்பான விரிவான ஆலோசனைகள் மற்றும் கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர், கீழ்க்கண்ட முகவரியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்:


உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம், தாராபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620023.
தொலைபேசி எண்: 0431-2421173

இந்தத் தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *