திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமார் 350 சுமைப்பணி தொழிலாளர்கள் 25 ஆண்டுகளாக வேலைசெய்துவருகின்றனர், இறக்கும் பொருட்களுக்கு ஏற்றவாறு கூலி என்ற நடைமுறையில் பணியாற்றிவரும் 12 சுமைத்தூக்கும் தொழிலாளர்களை சேகர் பிரதர்ஸ் என்ற லாரி செட் உரிமையாளர்கள் பணிநீக்கம் செய்து 70நாட்கள் ஆகியும், தொழிலாளர் நலத்துறை அவர்களுக்கு பணிவழங்க உத்தரவிட்டும் பணிவழங்காததை கண்டித்தும் தொழிலாளர் நலத்துறை உத்தரவை செயல்படுத்தாத காந்திமார்க்கெட் காவல்துறையை கண்டித்தும் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராமர் தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்று தொழிலாளர்களை வஞ்சிப்பதை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதை அரசு தடுத்து நிறுத்திடவேண்டும், சுவைப்பினை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாக்களித்த அமைச்சர்களும், எம்எல்ஏக்களும்
இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதற்கும் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments