6.11.2025 ம் தேதி இரவு 9 மணியளவில் மதுரையில் CBCID டிஐஜி வருண்குமார் உத்தரவின் அடிப்படையில் செந்தில் என்ற மாப்பிள்ளை செந்தில்( வயது 43) த/பெ கண்ணையன் சட்டவிரோதமாக கைது செய்து அடைத்துவைத்துள்ளது பற்றி புகார்

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை SP திரு. ஜெயக்குமார் அவர்கள் விசாரணை செய்தபோது பலமுறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த்தோடு “ராமஜெயத்தின் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு நாங்கள் உடன்படுகிறோம்” என்று நீதிமன்றத்திலேயே மனு கொடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கணேசன் லெப்ட் செந்தில், தினேஷ், மோகன்ராம், சுரேந்தர் உள்ளிட்ட 12 நபர்கள் சென்னையில் ஆஜராகி அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனையும் கடந்த 2022 ல் நடத்தப்பட்டது.

அதில் அவர்கள் 12 பேருக்கும் இந்த கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிந்த பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு வேறு திசையில் போய்க் கொண்டிருந்தது.
தற்போது திரு.வருண்குமார் டிஐஜி இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்பு கடந்த ஒரு வாரமாக நள்ளிரவில் சட்டவிரோதமாக உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்து அதில் கலந்து கொண்ட நபர்களை தூக்கிச் சென்று குற்றத்தை ஒத்துக் கொள்ளச் சொல்லி அடித்து,மிரட்டி வருகிறார்.

அதிகாலை 2 கடந்த 4.11.2025 இரவு /மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த செந்தில் என்ற மாப்பிள்ளை செந்தில்( வயது 43) த/பெ கண்ணையன் மதுரையில் உள்ள அவரது வீட்டில் சட்டவிரோதமாக கைது செய்து திருச்சிக்கு கூட்டிச் சென்றனர். அங்கு வைத்து ஒரு பொம்மையை கம்பியால் கட்டச்சொல்லி மிரட்டி பின் தாக்கியுள்ளனர். இல்லை என்றால் என்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் அவர் கம்பியால் அந்த பொம்மையை கட்டியுள்ளார். அதை காவல்துறையினர் வீடியோ எடுத்துள்ளனர். அதன்பின்னர் அவரை 5.11.2025 விடுவித்துள்ளனர்.

ஒரு நபரை விசாரிக்க வேண்டும் என்றால் BNSS சட்டத்தின் படி முறையாக சம்மன் அளிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2022 முதல் இந்த வழக்கில் ஒத்துழைப்பு அளித்த நபர்களை சட்டவிரோதமாக இரவில் பிடித்துக் கொண்டு போய் மிரட்டி “திருச்சி முட்டை ரவி கொலைக்கு பதிலாக தான் ராமஜெயத்தை கொலை செய்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுங்கள்” என்று மிரட்டுவது மனித உரிமை மீறலாகும்.
அதன்பின்னர் மீண்டும் 6.11.2025 ம் தேதி இரவு 9 மணியளவில் மதுரையில் CBCID டிஐஜி வருண்குமார் உத்தரவின் அடிப்படையில் செந்தில் என்ற மாப்பிள்ளை செந்தில்( வயது 43) த/பெ கண்ணையன் சட்டவிரோதமாக கைது செய்யப்ட்டு எங்கு வைக்கப்பட்டுள்ளார் என தெரியவில்லை. அவரது உறவினர்களிடம் வழக்கறிஞரிடம் செல்லக்கூடாது என மிரட்டி உள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் பலமுறை காவல்துறையின் விசாரணைக்கு கடந்த 2022 முதல் ஒத்துழைப்பு கொடுத்த நபர்களை ஏதோ தலை மறைவு குற்றவாளிகளைப் போல நள்ளிரவில் வீடு புகுந்து சட்டவிரோதமாக கைது செய்வதும், சட்டவிரோதமாக அடைத்து வைத்து மிரட்டி சித்திரவதை செய்யும் CB-CID டிஐஜி வருண்குமார் மீது மனித உரிமை ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் 6.11.2025 ம் தேதி இரவு 9 மணியவில் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள செந்தில் என்ற மாப்பிள்ளை செந்தில்( வயது 43) த/பெ கண்ணையன் என்பவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுகிறேன்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments