தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலை (Grade-II) காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான எழுத்து தேர்வு இன்று (09.11.2025)-ந்தேதி திருச்சி மாநகரில் 1.ஜமால்முகமது கல்லூரி, 2.நேஷனல் கல்லூரி 3.சமது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 4.பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி (பெண்கள் மட்டும்) ஆகிய 4 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் திருச்சி மாநகரில் ஆண்கள் – 2689 மற்றும் பெண்கள் – 883 என மொத்தம் 3572 போட்டியாளர்களில் 3159 (ஆண்கள் 2386 பெண்கள் – 773) நபர்கள் இந்த எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.
இத்தேர்வு நடைபெற்ற 4 மையங்களில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சுமார் 400 பேர் பணியமர்த்தப்பட்டு, தேர்வு நடைபெற்றது. மேற்கண்ட தேர்வின் சிறப்பு மேற்பார்வை அதிகாரியான (Super Check Officer) திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் தேர்வு நடைபெற்ற மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
4 தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்களுக்கு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்கான உகந்த சூழ்நிலையை உறுதி செய்யப்பட்டுள்ளதா எனவும், தேர்வு எழுத வருபவர்களுக்கு குடிநீர், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும், தேர்வு எழுத வருபவர்கள் உரிய சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை நேரில் சென்று பார்வையிட்டு, பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும் மாநகர காவல் ஆணையர் அவர்கள் மேற்பார்வையின்போது தேர்வின் துணைக்குழுதலைவர் காவல் துணை ஆணையர் (தெற்கு) திரு.T.ஈஸ்வரன் அவர்கள் மற்றும் 3 துணைக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments