திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி நாகமங்கலத்தில், திருச்சி மறை மாவட்ட கிருஸ்தவ துறவியர் பேரவை சார்பில் இயற்கையை காக்கும் நோக்கில் “பசுமைப் பயணம்” மிதிவண்டி மற்றும் நடைபயண பேரணி இன்று நடைபெற்றது.
இந்த மிதிவண்டி பேரணி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபெற்று வருகிறது.
கடந்த 5ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணம், இன்று திருச்சியை வந்தடைந்தது. பேரணி வரும் 20ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் இன்று நாகமங்கலத்தில் உள்ள இறை இரக்க ஆண்டவர் ஆலயத்தில் பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர். மேலும், அவர்கள் ‘பசுமையை பாதுகாப்போம்’ என்ற விழிப்புணர்வு நாடகம் நடத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்று, அடுத்த கட்டமாக சென்னை நோக்கி புறப்பட்டனர்.
இந்த நிகழ்வில் திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ், சேஷாத்ரி மயம், தீபி சாணு (IAS), உதவி ஆட்சியர் (பயிற்சி), தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments