இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட சிறப்பு தீவிர திருத்த பணியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 2543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கிடும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 23,68,968 எண்ணிக்கையிலான மொத்த வாக்காளர்களில், நாளது தேதி வரை 18,17,895 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு, முன்நிரப்பப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து மீள பெறப்படும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இன்று 140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) மற்றும் 142 – திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பணிமுன்னேற்ற அறிக்கை குறைவாக உள்ள பாகங்களில் சிறப்பு தீவிர திருத்த பணியினை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து பணிமுன்னேற்ற அறிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், 141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) மற்றும் 142 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பணிமுன்னேற்ற அறிக்கை குறைவாக உள்ள பாகங்களில் சிறப்பு தீவிர திருத்த பணியினை திருச்சிராப்பள்ளி கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து பணிமுன்னேற்ற அறிக்கைகளை கேட்டறிந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments