கடந்த 22.11.2022-ந்தேதி மாலை 1730 மணிக்கு ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடகரையில் உள்ள பத்ரிநாராயணன் என்பவரது தோப்பில் உள்ள வீட்டில் குடியிருந்து வரும் 60 வயது மூதாட்டியின் 22 வயதுடைய மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பேத்தியை அதே தோப்பில் பாலியில் வன்கொடுமை செய்த தஞ்சாவூர் மாவட்டம் மானன்சாவடியை சேர்ந்த எதிரி வினோத் 40/25 த.பெ.பழனிச்சாமி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 23.01.2023-ந்தேதி மேற்படி எதிரி வினோத் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இன்று 12.11.2025-ந்தேதி மேற்படி வழக்கில் திருச்சிராப்பள்ளி மாண்பமை அமர்வு நீதிபதி, மகிளா நீதிமன்றம் அவர்களால் எதிரி வினோத் என்பவருக்கு பாலியில் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு இ.த.ச பிரிவு 376(2)(1)-ன்படி 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments