மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண். WP (MD)13745/2023 வழக்கின் தீர்ப்பில் மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யக்கூடாத இடமாக நகர விற்பனை குழுவில் நிர்ணயம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதியரசர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளுக்கு உரிய மாற்று இடம் வழங்க 13.11.2025 அன்று காலை 11:00 மணிக்கு ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நகர விற்பனை குழு கூட்டத்தில், தெப்பகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளை மதுரைரோடு ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் பழைய நகராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்தில் மாற்றும் பணிகள் இன்று தொடங்கி 14.11.2025 அன்று மாலைக்குள் அனைத்து கடைகளையும் மாற்றி அமைத்துக் கொள்ளவும்,
கீழ்கரை பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளை காளியம்மன் கோவில் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான MLCP இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளவும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர விற்பனை குழு அனைத்து உறுப்பினர்களும் கலந்து ஆலோசித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தெரிவித்துள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments