Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு 7 பிங்க் ரோந்து வாகனங்கள் சேவையில்

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 312 கோடி செலவில் தொடங்கப்பட்ட 80 இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த (நவம்பர் 11, 2025) சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி, தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் ரோந்து பணிக்காக இந்த புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, திருச்சி மாநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 7 இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில், இன்று 17.11.2025-ந்தேதி காலை மாநகர காவல் ஆணையர் ந.காமினி அவர்கள் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுரை வழங்கும்போது, இளஞ்சிவப்பு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அைைனவரும், தங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின்மேல் காட்டும் அக்கறைப்போல அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாவித்து பாதுகாப்பு பணிபுரிய வேண்டும் என்றும், பணி நேரத்தில் உயர்ந்த ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டுமென்றும் என மாநகர காவல் ஆணையர் ந.காமினி  அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள்.

திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மெண்ட், பொன்மலை, கேகேநகர், ஸ்ரீரங்கம், காந்திமார்க்கெட், தில்லைநகர் ஆகிய 6 காவல் சரகங்களில் தலா 1 வாகனமும், பஞ்சப்பூர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை கண்காணிக்க 1 வாகனம் என மொத்தம் 7 இடங்களில் இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்கள் இயக்கப்பட்ட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களிலும் இரண்டு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்கள் சரகங்களில் ரோந்து பணிபுரிவார்கள்.
இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனமானது திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் GPS (Global Positioning System) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தில் உடனடி செய்தி பகிர்விற்கு வாக்கிடாக்கி சாதனத்துடனும், பொதுமக்களுக்கு அறிவிப்புகள் தெரிவிக்க Public Address System பொருத்தப்பட்டும், சைரன் ஒலிப்பான் (Siren sound) மற்றும் ஒளிரும் நீல-சிவப்பு விளக்கு (Flashing / Strobe light) பொருத்தப்பட்டு, திருச்சி மாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி / கல்லூரி பகுதிகளிலும், மற்ற நேரங்களில் பெண்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களாக கண்டறிப்பட்டும், இரவு ரோந்து செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *