அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல ஏஐடியூசி சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலளர் சுந்தர்ராஜ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பிரதிநிதிகள் தொகுப்புரையுடன் அறிக்கை விவாதம் செய்தனர்.
பொதுச்செயலாளர் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொருளாளர் கார்த்திகேயன் வரவு அறிக்கைக்கு பின் செலவு அறிக்கை சமர்ப்பித்தார். தணிக்கை குழு பேரவையில் வரவு செலவு அறிக்கை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சம்மேளன துணை பொதுச் செயலாளர் முருகராஜ் சிறப்புரை ஆற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள் தலைவர் செல்வராஜ் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜ் பொருளாளர் கார்த்திகேயன் அலுவலக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் 41 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
சம்மேளன பொருளாளர் நேருதுரை துணை பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்கள். ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் MC, தலைவர் நடராஜா பொருளாளர் ராமராஜ் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் கட்டுமான சங்க மாவட்ட தலைவர் முருகன் BHEL DTS AITUC நிர்வாகி கங்காதரன் ஆகியோர் பேரவையை வாழ்த்தி பேசினார்கள். தமிழக அரசு தனியார் மய நடவடிக்கையை கைவிட வேண்டும். ஒப்பந்த முறையில் ஓட்டுனர் நடத்துனர் நியமனத்தை கைவிட வேண்டும்.
காலிப்பணியிடங்களில் ஓட்டுனர் நடத்துனர் தனித் தனியே நியமனம் செய்திட வேண்டும். ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அகவிலைப்படி உயர்வினை நீதிமன்ற உத்தரவின் படி முழுமையாக வழங்கிட வேண்டும். ஓய்வு பணப் கால பெற்ற பலன்களை உடன் வழங்க தொழிலாளர்களின் ஓய்வு வேண்டும். 01.04.2003 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவரையும் பென்சன் திட்டத்தில் சேர்த்திட வேண்டும். அரசே பென்சனை ஏற்று நடத்திட வேண்டும்.
பெரும்பாலான பேருந்துகள் மகளிர் கட்டணம் இல்லா பேருந்துகளாக இயக்க படும் நிலையில் வருவாய் இலக்கு நிர்ணயம் செய்து நடத்துனர்களை வசூல் கேட்டு நிர்ப்பந்தம் செய்வது கைவிடப்பட வேண்டும். பணி பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வழித்தட நீட்டிப்பு செய்த பேருந்துகளுக்கு உரிய நேரம் ஒதுக்கி அட்டவணை வெளியிட வேண்டும்.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நூற்று இருபத்தைந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments