திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு நன்றிகளும் அவர்தம் பணிகள் சிறக்க வாழ்த்துகளும்
திருச்சி கரூர் இரயில்வே வழி தடத்தில் பழுர் LC 76 சுரங்க பாதையில் நீண்ட கால குறைபாடுகளை களைய திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களிடம் மனு அளிக்கபட்டதை தொடர்ந்து இன்று சேலம் கோட்டம் கரூர் ICE செளடப்பன் அவர்கள் பழுர் பகுதிக்கு கள ஆய்வு செய்ய நேரில் வந்து இருந்தார். அவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த லோகேஷ் ரவி,கடை கணேசன், L I C பூபதி, கீதா புட்ஸ் சதீஸ் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குறைபாடுகளை எடுத்துரைத்தனர்.
மேற்கண்ட அலுவலர் அவர்கள் நாளை முதல் சுரங்கப்பாதை தூய்மை செய்து ஒரு வாரத்தில் செப்பனிட்டு கொடுப்பதாகவும் விளக்குகள் சரிவர எரிவதற்கும் CCTV CAMERA பொருத்துவதற்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்து உள்ளார்கள்.
இக்குறைபாடுகள் களைய உறுதுணையாக இருந்து வரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் உதவியாளர் சியாம்,சேலம் கோட்ட ரயில்வே வாரிய உறுப்பினர் சேலம் மருத்துவர் சங்கேஸ்வரன் மற்றும், போர்முரசு குமார், பெட்டவாய்த்தலை விருமாண்டி, சிவ சிவா, ஐயாரப்பன்,
உள்ளிட்டவர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்து வரும் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிகை நண்பர்கள் ஊடகங்கள் அனைவருக்கும் எங்கள் கிராம மக்கள் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் பழுர் சீத்தாராமன் அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments