திருவெறும்பூர் மலைக்கோயில் என்று அழைக்கப்படும் எறும்பீஸ்வரர் கோயில் உலகப் புகழ்பெற்றது. இங்கு இறைவன் எறும்பீஸ்வரராகவும் இறைவி நறுங்குழல் நாயகியாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். கோவில் முன்பு உள்ள திருக்குளம் சுற்றுச்சுவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது இதனை கட்ட வேண்டும் என்று பக்தர்களும் பொதுமக்களும் தொடர்ந்து எங்களிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
எனது தலைமையில் அறங்காவலர் குழு பொறுப்பு ஏற்றதில் இருந்து இதற்காக தொடர்ந்து திருவெறும்பூர் தொகுதி எம் எல் ஏ வும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வலியுறுத்தி வந்தோம் அவர் இதற்காக பெரும் முயற்சி எடுத்து ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஏற்பாடு செய்து தருவதாக உறுதி கூறியுள்ளார். தற்பொழுது சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நிதிரெடி ஆனால் இக்கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அவர்களது அனுமதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இது சம்பந்தமாக எங்களது சொந்த செலவில் கோயில் செயல் அலுவலர் வித்யா மற்றும் அறங்காவலர் ஆகியோர் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி இங்கு கழிவறை கட்ட டெண்டர் விட பட்டும் அதற்கும் அனுமதி கிடைக்காததால் அந்தப் பணியும் செய்ய முடியாமல் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அமைச்சர் தலைமையில் பூமி பூஜை செய்து சுற்றுச்சுவர் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும்.
மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை விரைந்து அதற்கான உத்தரவை வழங்கவும் வேண்டுகிறோம். பேட்டியின் போது அறங்காவலர்கள் க.பன்னீர்செல்வம், அமுதா மாரியப்பன், ஆர் நல்லேந்திரன், ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments