திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில செயலாளராகவும், பஞ்சமி நில மீட்பு குழு தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் சண்முகசுந்தரம் வசிக்கும் பகுதியில் உள்ள பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமைத்தது தொடர்பாக பல்வேறு கட்ட புகார் மனுக்களை அரசு அனுப்பி ஆக்கிரமைப்புகளை மீட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன், பால்ராஜ், கார்த்திகேயன், சண்முக வேல், இளவரசன் மற்றும் சிறுவன் ஒருவர் என 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 29.04.2023 அன்று சண்முகசுந்தரத்தை வெட்டி கொலை செய்துள்ளது.
இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து வழக்கு விசாரணையானது திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில் சண்முகசுந்தரம் கொலை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்,
அதுவரை வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என சண்முகசுந்தரத்தின் மகன் நித்நியானந்தன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பான சாட்சியம் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 31.10.2025 அன்று சண்முகசுந்தரத்தின் மகன் நித்தியானந்தம் வீட்டில் இருந்தபோது சண்முகசுந்தரத்தின் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட நான்காவது நபர் சண்முகவேல் அரிவாளுடன் வந்துள்ளார்.
இதனை கண்ட நித்தியானந்தன் சுதாரித்துக் கொண்டு வீட்டின் உள்ளே ஓடிச்சென்று இரும்பு கேட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார்.
அப்போது அரிவாளுடன் சண்முகவேல் நித்தியானந்தா வெளியே வா பேசிக்கொள்ளலாம் என வெளியே வரும்படி கூறியிருக்கிறார் சண்முகவேல்.
ஆனால் சண்முகவேல் கையில் அரிவாள் இருப்பதை அறிந்த நித்தியானந்தன் உயிர் பயத்தில் வெளியே வர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் கொலை வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் உன்னை வெட்டி கொன்றுவிடுவேன் என ஆயுதங்களுடன் நித்தியானந்தனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் நித்தியானந்தன் வெளியே வராததால் உன்னை என்றைக்கு இருந்தாலும் கொன்று விடுவேன் என மீண்டும் மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சண்முகவேல் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் வாய்ஸ் ரெக்கார்டுடன் பதிவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சிறுகனூர் காவல் நிலையத்தில் நித்தியானந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட சண்முகசுந்தரத்தின் வீட்டுக்கு அருகே வசித்து வரும் இருதயராஜ் மனைவி ஆரோக்கிய செல்வி, அவரது மகன் ஜெகன் இருவரும்
தனது தந்தை கொலையுண்ட வீட்டிலேயே பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் தொழில் செய்துவரும் நித்தியானந்தன் எப்போதெல்லாம் தனியாக இருக்கிறார் என்பதை கவனித்து சண்முக வேலுக்கு தகவல் தெரிவித்ததும்,
அதன் அடிப்படையிலேயே சண்முகவேல் நித்யானந்தனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சண்முகவேல், ஆரோக்கிய செல்வி மற்றும் ஜெகன் மூன்று பேர் மீது சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று கடந்த 2024 ஆம் வருடம் சண்முகசுந்தரம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3வது நபர் கார்த்திகேயன் என்பவர் வழக்கை வாபஸ் பெற சொல்லி நித்தியானந்தன் மற்றும் சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கொலை வழக்கை வாபஸ் பெற சொல்லி மிரட்டல் விடுத்ததால் உயிருக்கு பயந்துபோய்
சண்முகசுந்தரத்தின் மகன் நித்தியானந்தன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்போது வெவ்வேறு இடங்களில் வசித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் நித்தியானந்தனை சண்முகவேல் மிரட்டிய சிசிடிவி காட்சிகள், மேலும் நித்தியானந்தன் தனது குடும்பத்தினர் உயிரை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கும் செல்போன் வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 3 பேர் புகைப்படம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments