Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் நாலேட்ஜ் இல்லை – திருச்சியில் அண்ணாமலை பேட்டி

திருச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பாஜக BLA2 முகவர்கள் விண்ணப்பம் நிரப்பும் பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மக்கள் பாஜகவினரை  ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

SIR படிவத்தை நிரப்பி
வேகமாக கொடுங்கள் டிசம்பர் 4 வரை அதற்கான காலம் இருக்கிறது. இதனை சமுதாய பணியாக செய்ய வேண்டும் என்று தேசிய தலைவர் கூறி உள்ளார். அதனை சிறப்பாக பாஜகவினர் செய்து வருகின்றனர்

மெட்ரோ ரயில் கோவைக்கும் மதுரைக்கும் மறுக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பிரதமரை சந்திக்க தயார் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு…

பிரதமர் தமிழகத்திற்கு வந்தார். முதல்வர் சந்திக்கவில்லை. பிரதமர் மோடி கோவை வந்தபோது முதல்வர் ஸ்டாலின் வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் கூட பிரதமர் மோடி வந்தால் சந்திக்க வருகின்றனர்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ஒவ்வொருமுறையும் காரணம் சொல்கின்றனர்.
தமிழக முதல்வருக்கு கோவை மதுரைக்கு மெட்ரோ வர கூடாது என்ற எண்ணம் தான் உள்ளது.

மெட்ரோ விவகாரத்தில் தமிழக முதல்வர் கவனம் செலுத்தவில்லை.

தமிழக அரசு மதுரை கோவைக்கு மெட்ரோ வேண்டுமென்று கொடுத்த அறிக்கையில் என்ன தவறுகள் உள்ளது என கடிதம் வெளியிட்டு உள்ளோம் என கூறி உள்ளோம்.
DPR வரைமுறைக்கு உட்பட்டதாக இல்லை. மீண்டும் அதனை சரி செய்து மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லை என கனிமொழி எம்பி கூறியது குறித்த கேள்விக்கு..,

இந்தியா முழுவதும் வரைமுறை வகுக்கப்பட்டு ஜனாதிபதி பார்வையில் மாநிலங்களுக்கு நிதி பகிர்வு கொடுக்கப்படும். தமிழகத்திற்கான நிதி பகிர்வு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மெட்ரோவுக்கு என அதிக நிதி கொடுக்கப்பட்டதில் தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு தான்.

உதயநிதி என்ன பணி செய்தால் என அவர்கள் கூற வேண்டும். ஈரப்பதம் என்பது விவசாயிகளுக்கு எப்போதும் இருக்கும் பிரச்சனை தான்

அதிக மழை பெய்த போது மத்திய அரசு நெல் ஈரப்பதத்தை 19.5 வரை தளர்த்தி உள்ளது. நெல்லை பாதுகாக்க புதிய குடோன் கட்டவேண்டும், தார்பாய்கள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 360 கோடி ஊழல் நடந்துள்ளது.

தயாராக இருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய
60 நாட்கள்  எடுத்துள்ளனர்.

உடைந்த அரிசியாக இருந்தாலும் அதனை 5, 6 சதவிகிதம் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

திமுக அரசு ஈரப்பதம் இல்லாமல் நெல்லை காப்பாற்ற தவறிவிட்டது.
இதில் குற்றவாளி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்.

டிஜிபி தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு உள்ளது என ரகுபதி கூறியது குறித்த கேள்விக்கு.

தமிழக அரசு பொய் சொல்கிறது. அமைச்சர் ராகுபதிக்கு சரியான விவரம் தெரியவில்லை.

தமிழக அரசு தேர்வு செய்து அனுப்பும் 5 பேரின் விவரங்கள் பார்க்கப்பட்டு அதில் 3 பேரை  சீனியர் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த மூன்று பேரில் இருந்து டிஜிபியை முதல்வர் தேர்வு செய்யலாம்.
திமுக அரசுக்கு வேண்டியவரை  கொண்டு வருவதற்காக காலம் தாழ்த்துகின்றனர்.

பொறுப்பு டிஜிபி தமிழகத்தில் உள்ளார். டிஜிபி இல்லை என்பதால் குற்ற சம்பவம் தமிழகத்தில் நடக்கிறது.

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு..,

உதயநிதி ஸ்டாலினுக்கு
சப்ஜெக்ட் நாலேட்ஜ் இல்லை. இது நம்மளுடைய சாபக்கேடு.

எஸ் ஐ ஆர் விவகாரத்தில், பீகாரில்
6.49 சதவிகிதம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் அதிக போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

திமுக ஆதரவு வருவாய்த்துறை அலுவலர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டம் திமுக அரசு கூட்டமால் உள்ளனர்.

பாமக தலைவர் ராமதாஸ் மீது
பிரதமர் நல்ல மதிப்பை வைத்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்கள் இது குறித்து பேசி நல்ல முடிவு எடுப்பார்கள்.

கனிம வலம் மூலம் தமிழகத்திற்கு 100 கோடி வருவாய் வந்துள்ளது என தமிழக அரசு கூறுகிறது. அது மிகவும் குறைவு கனிமவளக் கொள்ளையில்  திமுகவினர் தான் அதிகமாக உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *