திருச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.
எஸ்.ஐ.ஆரை பொருத்தமட்டில் பல இடங்களில் சொல்லி இருக்கேன். மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்ப்பதற்க்கு தான் திமுக அரசு இருக்கிறது. நாலே முக்கால் வருஷத்தை திமுக அரசு வீணடித்துள்ளது. மக்களுக்கு தேவையான எந்த விஷயத்தையும் செய்வதில்லை. கஞ்சா, போதை பொருள் ஒழிக்கவில்லை. சொத்துவரி, மின் கட்டண உயர்வு இரண்டு மாசம் கணக்கீட்டை ஒரு மாசம் என சொல்லி எதையும் செய்யவில்லை.
ஆனால் முதலமைச்சர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆக்குவது கூட்டணி கட்சிகளை வைத்து அதை மட்டும் செய்து வருகிறார். என்னுடைய திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இறந்து போனவர்கள், வெளியூர் சென்றவர்கள் திருமணம் முடிந்த சென்றவர்கள் உள்ளனர்.
இதற்கு தான் எஸ்.ஐ.ஆர் உள்ளது.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் முதலமைச்சருக்கு என்ன வருத்தம் இருக்கிறது என்று தெரியவில்லை.
எங்களிடம் அவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் தமிழக முதல்வர் மற்றும் திமுகவினரை பார்த்து நீங்கள் எந்த கேள்வியும் எஸ்.ஐ.ஆர் பற்றி கேட்பதில்லை…
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசு மறுத்தது குறித்த கேள்விக்கு?
ஈரப்பதம் வருவதற்கு திமுக அரசாங்கம் தான் காரணம்.
அறுவடைக்குப் பின் கொள்முதல் செய்ய வேண்டியது யாருடைய பொறுப்பு.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய பொறுப்பு.
நெல்மணிகளை பாதுகாக்க போதிய சேமிப்பு கிடங்கு தமிழக அரசிடம் இல்லை ஆனால் மத்திய அரசிடம் இருக்கிறது ஆனால் அதனைப் பயன்படுத்துவதில்லை.
இவர்கள் தேவையில்லாமல் 10 கோடி ரூபாய் செலவு செய்து மழை எப்போது வரும் என்பதை கண்டறிவதற்கான கருவிகளை வாங்கி வைத்துள்ளனர்.
மழை வருவது குறித்து முன்கூட்டியே அறிந்தவர்கள் அதற்கான முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு செய்யாமல் இருந்தது ஏன் அதன் பின்னால் மழையில் நெல் மூட்டைகளை நனைய வைத்தபின் ஈரப்பதத்திற்கு நிதி வழங்கவில்லை என்று கேட்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது.
இவை அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டியது தமிழக முதல்வர் தானே தவிர மத்திய அரசு இல்லை.
நெல் மூட்டைகளை வைத்திருப்பதற்கு 40 ரூபாய் வாங்குவது மட்டுமல்ல அந்த இடமே தனியார் இடத்தில் தான் வைத்துள்ளார்கள் அதற்கும் சேர்த்து தான் விவசாயிகளிடம் காசு வாங்குகிறார்கள்.
விவசாயிகளுக்காக பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் விவசாயிகளுக்கு வருடம் தோறும் மத்திய அரசுதான் நிதி வழங்கி வருகிறது.
காவிரி டெல்டா காரன் என்று சொல்கிறார்கள் ஆனால் விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள்.
குறிப்பாக, காவிரி டெல்டா நலன் என்று சொல்லிக்கொண்டு காவிரி டெல்டா பாசன விவசாயிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை வஞ்சித்து வருகிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments