தேசிய மாணவர் படை எனப்படும் என்சிசி அமைப்பின் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனிடையே, 77வது என்சிசி தினத்தையொட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள, கார்கில் போரில் எதிரிகளின் முகாம்களை அழித்து வீரமரணமடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் விஜயகுமார் தலைமையில் தேசத்தை கட்டி எழுப்பும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாகவும்,
என்சிசி வீரர்களின் தன்னலமற்ற சேவை மற்றும் கடமை உணர்வு, தலைமைத்துவத்தை பறைசாற்றும் விதமாக என்சிசி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தியதுடன், நாட்டின் பாதுகாப்பிற்கு தங்களால் ஆன ஒத்துழைப்பை நல்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
பட்டாலியன் 2 பிரிவின் நிர்வாக அதிகாரி கர்னல் பிகே வேலு, திருச்சி என்சிசி குரூப் தலைமையிட நிர்வாக அதிகாரி புஷ்பேந்தர், லெப்டினன்ட் கர்னல் சரவணன், பெண்கள் பட்டாலியன் பிரிவின் தலைவர் மேஜர் மினி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். 
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments