திருச்சி வினோத் கண் மருத்துவமனையின் கூட்டு முயற்சியுடன், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தன் அவர்களின் அனுமதியுடன், காவலர்களுக்கான சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் “சேவை செய்பவர்களுக்காக நாங்கள் சேவை செய்கிறோம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் காவல் துறையின் பட்டாலியனில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் இந்தச் சேவை வழங்கப்பட்டது.
முகாமில் பங்கேற்ற சுமார் 200 காவலர்களுக்கு இலவசக் கண் பரிசோதனை மற்றும் நரம்புப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனைக்குப் பின்னர், கண் கண்ணாடி அல்லது மருந்துகள் தேவைப்படும் காவலர்களுக்குத் தகுந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இந்தச் சேவை சுமார் ஐந்து நாட்களுக்கு நடைபெறும் எனவும், முதல் நாளான இன்று (நவம்பர் 24, 2025) மட்டும் சுமார் 40 காவலர்கள் இந்த இலவச மருத்துவப் பரிசோதனையைப் பயன்படுத்திக் கொண்டு பயனடைந்துள்ளனர்.
ஒரு நாளைக்குச் சராசரியாக 30 காவலர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக வினோத் கண் மருத்துவமனை மருத்துவர் வினோத் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments