தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தூய வளனார் கல்லூரி தாவரவியல் துறை, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி இணைந்து தூய வளனார் கல்லூரியில் மாவட்ட அளவிலான துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா 23.11.2025 அன்று நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. 2024-25 கல்வியாண்டில் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய திறனறிதல் தேர்வில் சிறப்பிடம் பெற்ற குழந்தைகளுக்கு இந்நிகழ்வானது நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பகுத்தறிவன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் அறிமுகவுரை ஆற்றினார். பெல் சிட்டி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பயிற்றுநர் அப்ரோஸ் நிகழ்வை தொடங்கி வைத்து பேசினார். உயிரியல் புல முதன்மையர் பிரான்சிஸ் சேவியர், தாவரவியல் துறைத் தலைவர் சகாய சதீஸ், மாநிலச் செயலாளர் மு.மாணிக்கத்தாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அறிவியல் பரிசோதனைகள், வானியல் மற்றும் ரோபோடிக் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கல்லூரி அருங்காட்சியகம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆய்வகங்களுக்கு கல்லூரி சுற்றுலா அழைத்த செல்லப்பட்டது. கருத்தாளராக மாவட்ட நிர்வாகிகளான பேரா.அருண்விவேக், பேரா.ஜானி குமார் தாகூர், ச.பாலுசாமி, பேரா.சலாஹூதீன், ஆ.யோகலட்சுமி, வே.சுகுணா, ஆர்.பிரபா செயற்குழு உறுப்பினர் ஆர்.கௌதம் ஆகியோர் செயல்பட்டனர்.

இதன் நிறைவு நிகழ்வில், கல்வியாளர் ஆர்.மனோகரன், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி தலைவர் எஸ்.பாலாஜி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் பேரா.உஷாநந்தினி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஆர்.சீத்தா ஆகியோர் குழந்தைகளுக்கு துளிர் விஞ்ஞானி என்ற கேடயமும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரை வழங்கினார்கள். அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் 125க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ச.மாரிமுத்து நன்றி கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments