டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை வாங்கி, மது அருந்திய பின், விளை நிலங்கள், சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். இதனால், விலங்குகள், மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் திருச்சியில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் இன்றுமுதல் அமலுக்கு வந்தது.
டாஸ்மாக் மது பாட்டில்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையுடன் ரூ.10 கூடுதலாக வாடிக்கையாளரிடம் பெறப்பட்டு, காலி மதுபாட்டில்களை மீண்டும் அதே டாஸ்மாக் கடையில் கொடுத்து வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் திரும்பபெற்று வருகின்றனர்.
காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தால், நமது பாட்டில்களில் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்க வேண்டிய சூழல் உள்ளதால் கால விரயம் ஏற்படுவதால், திருச்சியில் பல்வேறு டாஸ்மாக் மதுபானகடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அதே நேரம் அதிக பணிச்சுமை காரணமாக காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு டெண்டர் எடுத்தவர்களே மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி வழங்க வேண்டும், டாஸ்மாக் கிளைகளில் மதுபான பாட்டில்களை திரும்ப வைப்பதற்கு உரிய இடம் ஒதுக்கீடு தர வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஒரு சில மதுபான கடைகள் பூட்டப்பட்டு போராட்டத்தில் இறங்கினர். கடையை மூட சொல்லி டாஸ்மாக் சங்கத்தினர் தொடர்ந்து கூறி வந்தனர்.
ஒரு மணி நேரமாகியும் திருச்சி மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்காமல் இருந்தது. மூடிய கடைகளை திறக்க வலியுறுத்தியும் அதிகாரிகளிடமிருந்து அழுத்தம் வந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments