திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
இன்று 25.11.2025 ஆம் தேதி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர்ரோடு, அருள்மிகு கைலாயநாதர் ஆலயம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து அதனை குடோனோக பயன்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காந்திமார்க்கெட் காவல் சரக உதவி ஆணையர், காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆளிநர்கள், மேற்படி வீட்டில் இருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ்சர்மா இருவரும் என தெரியவந்தது.
வெளிமாநிலங்களில் இருந்து, அனீஸ் என்ற நபர் மூலம் குட்கா பொருள்களை கடத்தி வந்து, தஞ்சாவூர்ரோட்டில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து திருச்சியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் 22 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 240 கிலோ ஹான்ஸ், 20 கிலோ கூல்லிப், 8 கிலோ விமல் என மொத்தம் சுமார் ரூ.7,00,000/- மதிப்புள்ள சுமார் 268 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும், மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை அதிரடியாக பிடித்த காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பாராட்டினார்கள
மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா,
குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments