திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையில் செய்யப்பட்ட டெம்போ ட்ராவலர் கூண்டு உந்து (Tempo Traveller Van) தற்போது உள்ள நிலையிலேயே வருகின்ற 11.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையில் வைத்து பொது ஏலம் நடைபெற உள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 09.12.2025-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தினை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 11.12.2025 அன்று காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை தங்களது ஆதார்

அட்டையுடன் டெம்போ ட்ராவலர் கூண்டு உந்து (Tempo Traveller Van) வாகனத்திற்கு ரூ.5000/- முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி டெம்போ ட்ராவலர் கூண்டு உந்து (Tempo Traveller Van) வாகனத்திற்கு 18% முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision






Comments